சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றவர் சஞ்சான கல்ராணி. தமிழில் நடிக்கும் நிக்கி கல்ராணியின் சகோதரி. தற்போது ஜாமினில் விடுதலையாகி உள்ள சஞ்சனா கல்ராணி நடிப்பில் தீவிரமாக இறங்கி உள்ளார்.
கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த சஞ்சனா கல்ராணி தற்போது மலையாளத்தின் பக்கமும் கவனம் செலுத்துகிறார். மோகன்லால் நடிக்கும் ஆராட்டு படத்தில் சிறிய கேரக்டரில் நடிக்கும் சஞ்சனா கல்ராணி, டாக்டர் பிரவீன் ராணா நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.
இதுகுறித்து சஞ்சனா கூறியிருப்பதாவது: கடவுள் ஒரு கதவை மூடும்போது இன்னொரு கதவை திறப்பார் என்பார்கள். என் விஷயத்தில் அது மிகவும் உண்மை. கடந்த ஆண்டு நிறைய கதவுகளை மூடினார். இப்போது நிறைய கதவுகளை திறக்கிறார். வாழ்க்கையின் இருண்ட பகுதியை பார்த்துவிட்டேன். அதனால் நான் பயந்துவிடவில்லை. முன்பை விட தன்னம்பிக்கையோடு இருக்கிறேன். கடவுளிடம் இருந்து எனக்கு நியாய தீர்ப்பு கிடைக்கும். என்கிறார்.