ஜூலை 25ல் ‛அவதார் 3' டிரைலர் | இசை நிகழ்ச்சி! கெனிஷா உடன் இலங்கை சென்ற ரவி மோகன் | ‛பராசக்தி' படத்தில் இணைந்த ராணா | வார் 2 படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | மாரி செல்வராஜின் 'பைசன்' பிஸினஸ் எப்படி? | இறுதிக்கட்டத்தை எட்டிய ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் படம் | இலங்கை தமிழ் படத்தில் டி.ஜே.பானு | புராண அனிமேஷன் படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | வசூலை குவிக்க அடுத்து வருகிறது 'ட்ரான்: ஏரிஸ்' | அனிருத் இசை நிகழ்ச்சி திடீர் ரத்து |
கார்த்தி நடிப்பில் வெளியான 'மெட்ராஸ்' படத்தின் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமானவர் கேத்தரின் தெரசா. இந்த படத்திற்கு பிறகு கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடித்து வந்த கேத்தரினுக்கு போதிய வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு பக்கம் ஒதுங்கினார். அங்கு ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வரும் கேத்தரின், தற்போது அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
தெலுங்கில் கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார். கவர்ச்சியில் தாராளம் காட்டுவதால் தமிழை விட தெலுங்கில் அதிக ரசிகர்களை கொண்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் கேத்ரின், தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது கவர்ச்சிக்கு ரொம்பவே இடம் கொடுத்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் கேத்ரின்.