மீண்டும் ஹீரோவாக ஆக்சன் கிங் அர்ஜுன்! | ‛மதராஸி' படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக திட்டமிடும் படக்குழு! | கமல் படத்தில் நடிக்கும் வாய்ப்பினை தவறவிட்ட நாயகிகள்! | கணவரை பிரிந்து வாழ்கிறாரா ஹன்சிகா? | ‛‛அப்செட் ஆனால் இதை செய்வேன்'': ரகசியம் சொன்ன கீர்த்தி சுரேஷ் | தரன் தரும் தரமான இலக்கியம் | பிளாஷ்பேக்: காலம் கடந்தும் பேசப்படும் காவியப் படைப்பு “கண்ணகி” | ஜோதிடத்தை நம்பி படத்தை போட்ட வம்பு நடிகர் | கதை கேட்காமல் நடித்தேன்: 'சர்ப்ரைஸ்' தரும் சாயாதேவி | கந்தன் கருணை, ஆழ்வார், சர்கார் - ஞாயிறு திரைப்படங்கள் |
சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை மையப்படுத்தி ஏராளமான படங்கள் வந்திருக்கிறது. சந்தன கடத்தல் வீரப்பன் காட்டுக்குள் பல இடங்களில் பணத்தையும், யானை தந்தத்தையும், தங்கத்தையும் ஆங்காங்கே புதைத்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த புதையல்கள் எப்படி இருக்கிறது? எங்கே இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. அந்த புதையலை தேடி செல்லும் ஒரு குழுவின் கதையாக உருவாகி வருகிறது வீரப்பனின் கஜானா என்ற படம். இந்த படத்தில் யோகிபாபு தான் ஹீரோ. அவர் தான் புதையலை தேடும் குழுவின் கேப்டன். காமெடி கலந்த அட்வென்ஜர் படமாக உருவாகி வருகிறது. இதில் யோகி பாபு கவ்பாய் கெட்அப்பில் நடித்து வருகிறார். படத்தை யாஷ் இயக்குகிறார், கோபி துரைசாமி ஒளிப்பதிவு செய்கிறார், ஞானசேகரன் இசை அமைக்கிறார், சாம்ஸ் தயாரிக்கிறார்.