ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
நடிகர் விஜய்யும் குணச்சித்திர நடிகரான ஸ்ரீமனும் நீண்ட நாள் நண்பர்கள்.. விஜய்யுடன் 'லவ் டுடே', 'நிலாவே வா', 'நெஞ்சினிலே' வசீகரா, 'பிரண்ட்ஸ்', போக்கிரி உட்பட பல படங்களில் தவறாது இடம்பெற்று வந்தார். 2017ல் வெளியான 'பைரவா' படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த ஸ்ரீமன், இந்த வருடம் வெளியான மாஸ்டர் படத்திலும் அவருடன் இணைந்து நடித்திருந்தார்..
இந்தநிலையில் 17 வருடங்களுக்கு முன் வசீகரா படத்தில் விஜய்யும் தானும் ஒரு காட்சியில் இணைந்து நடித்த புகைப்படங்களை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் ஸ்ரீமன். சம்பந்தப்பட்ட அந்த காட்சியை படமாக்கியபோது காலையில் இருந்து மதியம் லஞ்ச் பிரேக் விடும் வரை அங்கிங்கு நகராமல் ஒரே இடத்தில் நானும் விஜய்யும் அமர்ந்திருந்தோம் என குறிப்பிட்டுள்ளார் ஸ்ரீமன்.