காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஸ் இயக்கும் படம் யூகி. கதிர், நரேன், நட்டி என மூன்று நாயகர்கள் நடிக்க, இவர்களுடன் பவித்ரா லட்சுமி, கயல் ஆனந்தி, ஆத்மியா என மூன்று ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இவர்களுடன் ராஜன், பிரதாப் போத்தன், ஜான் விஜய், முனீஷ் காந்த், சினில் சைனுதீன், வினோதினி, அஞ்சலி ராவ் மற்றும் பிந்து சஞ்சீவ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
பாக்கியராஜ் ராமலிங்கம் திரைக்கதை எழுதுகிறார், புஷ்பராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்களுக்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்க, டான் வின்சென்ட் பின்னணி இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் தயாராகும் இப்படம், சென்னை மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது.