ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி? | சீக்ரெட் காக்கும் ஷா | நீச்சல், நடிப்பு...ஜெயித்த ஜனனி | 'பத்த வைக்கும் பார்வைக்காரி' வைஷ்ணவி | அல்லு அர்ஜுன் பட வாய்ப்பு: 'நோ' சொன்ன பிரியங்கா சோப்ரா; காரணம் என்ன ? | 3 நாளில் 100 கோடி கடந்த 'குட் பேட் அக்லி' | பிளாஷ்பேக்: ஜெயலலிதாவின் வெள்ளித்திரைப் பயணத்திற்கு வெளிச்சம் காட்டிய “வெண்ணிற ஆடை” | புதிய காதலியுடன் விழாவில் ஆமீர்கான் | பராசக்தி, தேவதையை கண்டேன், கிங்ஸ்டன் - ஞாயிறு திரைப்படங்கள் | அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? |
தென்னிந்திய சினிமாவில் தற்போதுள்ள நடிகைகளில் மிக அழகாக நடனமாடுபவர்களில் சாய் பல்லவிக்குத்தான் முதலிடம் என தாராளமாகச் சொல்லலாம். மற்ற நடிகைகள் அவர்களது ஆடைகளாலும், கிளாமராலும் ரசிகர்களைக் கவர முயற்சிக்க சாய் பல்லவி மட்டும் அப்படி எதுவுமில்லாமல் தனது நடனத்தால் மட்டுமே ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். அதை அவருடைய மூன்று பாடல்கள் நிரூபித்துள்ளன.
வேறு எந்த தென்னிந்தியந்திய நடிகையும், ஏன் வேறு எந்த நடிகரும் செய்யாத சாதனையை சாய் பல்லவி செய்திருக்கிறார். தமிழ் சினிமாவில் தனுஷ், சாய் பல்லவி நடித்த 'மாரி 2' படத்தின் 'ரவுடி பேபி' பாடல் மட்டும் இதுவரை 1200 மில்லியனைக் கடந்துள்ளது. மேலும், 'பிடா' படப் பாடல் 'வச்சிந்தே' 309 மில்லியனை கடந்துள்ளது.
இந்தநிலையில், சாய் பல்லவி நடித்து விரைவில் வெளிவர உள்ள 'லவ் ஸ்டோரி' படத்தில் இடம் பெற்றுள்ள 'சாரங்க தரியா' பாடல் தற்போது 300 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. மூன்று 300 மில்லியன் பாடல்களைத் தற்போது தனது சாதனையில் சேர்த்துக் கொண்டுள்ளார்.