'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
தனுஷ் நடித்த மாரி 2 படத்தில் யுவன் சங்கர் ராஜாஇசையில் இடம்பெற்ற ரவுடிபேபி பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இப்போதுவரை அந்த பாடல் யூடியூப்பில் சாதனை செய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படத்திற்கும் இசையமைத்துள்ளார் யுவன்.
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள நாங்க வேற மாதிரி என்ற பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டு, மூன்றே நாட்களில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர். இதனால் மிகுந்த உற்சாகமடைந்துள்ளார் யுவன் சங்கர்ராஜா. அடுத்து வலிமை படத்தின் எண்ணம் போல் வாழ்க்கை என்ற இன்னொரு பாடலும் விரைவில் தனது யூடியூப் பக்கத்தில் வெளியாக இருப்பதாகவும் அறிவித்துள்ள யுவன், தனது யு1 ரெக்கார்ட்ஸ் தளத்தின் மூலம் புதிய பாடகர்-பாடகிகளை அறிமுகப்படுத்துவதோடு, கவித்துவமான பாடல்களுக்குத்தான் நான் அதிக முக்கியத்துவம் கொடுப்பேன் என்கிறார்.