விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் |
குக் வித் கோமாளி பிரபலமான கனி, தான் தாலி அணியாததற்கான காரணத்தை யூ-டியூப் லைவ்வில் வெளிப்படையாக அறிவித்தார். அந்த வீடியோவில் அவர் பேசியது இணையத்தில் வைரலாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் கனி. இவர் காதல் கோட்டை படத்தின் இயக்குனர் அகத்தியனின் மூத்த மகள். குக் வித் கோமாளி இரண்டாவது சீசனின் டைட்டில் பட்டத்தை வென்று மக்கள் மனதிலும் கனி இடம் பிடித்தார். சொந்தமாக யூ-டியூப் சேனலை நடத்தி வரும் கனி அடிக்கடி ரசிகர்களுடன் சமூகவலைதளத்தில் நேரலையில் தோன்றி ரசிகர்களின் கேள்விகளுக்கும் விடையளிப்பார். அந்த வகையில் சில தினங்களுக்கு முன் இன்ஸ்டாவில் அவர் நேரலையில் வந்தார். அப்போது ஒருவர் நீங்கள் ஏன் தாலி அணிவதில்லை? என்ற கேள்வியை ரசிகர் ஒருவர் எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த கனி. "தாலி அணிவது தமிழர் கலாச்சாரத்தில் இல்லாத ஒரு விஷயம். இடையில் புகுத்தப்பட்ட ஒன்று. எனக்கு அதன் மீது நம்பிக்கை இல்லை. என் திருமணம் தாலிக்கட்டி தான் நிகழ்ந்தது. திருமணத்தின் போது கட்டிய மொத்தமான மஞ்சள் கயிறு தாலி எனக்கு பிடித்திருந்ததால் நான் அதை அணிந்துக் கொண்டேன். தாலி பிரித்து அணியும் போது புருஷன் அல்லாது மற்றவர்கள் தான் தாலியை கட்டினார்கள். அந்த தாலியின் மீது எனக்கு பெரிதாக நம்பிக்கை இல்லை. என் கணவன் எனக்கு கட்டிய தாலியை நான் இன்னும் பத்திரமாக வைத்துள்ளேன். அதுதான் எனக்கானது. வேறு ஒருவர் மாற்றி கட்டிய தாலியை நான் ஏன் அணிய வேண்டும். நான் என் கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறேன். இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக உள்ளேன். இதை விட திருமணம் ஆகிவிட்டது என கூற வேறு என்ன அடையாளம் வேண்டும்" என வெளிப்படையாக கூறினார்.
இவரது இந்த பதில் இணையத்தில் பரவியதோடு, தாலி அணியாமல் இருப்பதற்கு இப்படி ஒரு காரணமா என விவாத பொருள் ஆகியுள்ளது.