ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா, இளம் பெண்களுக்கு சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி அவர்களை பயன்படுத்தி ஆபாச படம் உருவாக்கி அதனை மொபைல் செயலியில் வெளியிட்டதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்னர் மும்பை போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இந்த வழக்கு விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து போலீசார் கூறியிருப்பதாவது : மும்பையின் மையப்பகுதியான அந்தேரி மேற்கில் அமைந்துள்ள ராஜ் குந்த்ராவின் அலுவலகத்தில் இருந்து அதிக அளவில் ஆபாச படங்கள் கைப்பற்றப்பட்டன. அவரது அலுவலகத்தில் இருந்த அனைத்து கணினிகளும் சீலிடப்பட்டுள்ளன. ராஜ் குந்த்ரா நடத்தி வந்த ஆபாச செயலியும் முடக்கப்பட்டுள்ளது. ஆபாச படங்கள் தயாரிப்பில் கடந்த 18 மாதங்களாக ராஜ் குந்த்ரா ஈடுபட்டு வந்துள்ளார். கொரோனா ஊரடங்கு நேரத்தில் அவருடைய தொழில் சூடு பிடித்திருக்கிறது.
அவரது ஆபாச செயலில் 20 லட்சம் உறுப்பினர்கள் கட்டண உறுப்பினரகளாக இருக்கின்றனர். இதன் மூலம் ராஜ் குந்த்ரா கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளார். செயலியில் ஆபாச படம் பார்ப்பது இணையத்தில் பார்ப்பதைவிட எளிதாக இருந்ததால் இந்த செயலி வேகமாக பிரபலமாகி உள்ளது. ராஜ் குந்த்ரா தொடக்கம் முதலே விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுத்து வருகிறார். தான் ஆபாச படம் எதுவும் தயாரிக்கவில்லை என்றே கூறிவருகிறார். ஆனால் அவர் மீதான வழக்குக்கு போதுமான ஆதாரங்கள் கிடைத்துவிட்டன.