ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
நினைக்காத நாளில்லை, தீக்குச்சி, அக்கி ரவ்வா (தெலுங்கு) உள்ளிட்ட படங்களை இயக்கிய ஏ எல் ராஜா, தற்போது சூரியனும் சூரியகாந்தியும் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில் அவர் ஓரு வினா, ஓரு விடை என்ற ஆல்பத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். இதில் ஸ்ரீஹரி என்ற மலையாள நடிகர் நடித்துள்ளார். ஒன்றிரண்டு மலையாள படங்களில் நடித்துள்ள ஸ்ரீஹரி ஏ.எல்.ராஜா இயக்கும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: இசை அமைப்பாளர் ஆர் எஸ் ரவிப்பிரியன் மற்றும் பாடலாசிரியர் செந்தமிழ் ஆகியோர் ஒரு பாடலை பதிவு செய்தனர். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு பாடலை இயற்றி அதற்கான காட்சிகளை அமைக்க என்னை அவர்கள் அணுகினர். நண்பர்களுக்காக நான் இசை செய்தேன்.
இந்த ஆல்பத்தின் நாயகன் ஸ்ரீஹரி பேசவும் கேட்கவும் முடியாதவர் . ஆனால் அவர் மிகவும் திறமையானவர். ஏற்கனவே ஒரு மலையாளம் படத்தில் கதாநாயகனாக அவர் நடித்துள்ளார். அவர் நடனமாடுவதிலும் வல்லவர். தற்போது நான் இயக்கி வரும் சூரியனும் சூரியகாந்தியும் படத்திற்குப் பிறகு இயக்கவிருக்கும் படத்தில் ஸ்ரீஹரியை கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறேன்.
சூரியனும் சூரியகாந்தியும் படத்தில் வித்தார்த், அப்பு குட்டி, விக்ரம் சுந்தர், பிளாக் பாண்டி மற்றும் சந்தானபாரதி முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கும் ஆர் எஸ் ரவிப்பிரியன் தான் இசையமைக்கிறார். என்றார்.