பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் |

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படம் சார்பட்டா பரம்பரை. நீலம் புரொடக்சன்ஸ், கே9 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் துஷாரா, பசுபதி, கலையரசன், அனுபமா குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். வட சென்னையில் நடைபெற்று வந்த குத்துச்சண்டை போட்டியை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தபடம் அமேசான் பிரைமில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இதை நடிகர் சூர்யா வெளியிட்டார். அதோடு, படக்குழுவினரின் உழைப்பு திரையில் தெளிவாக தெரிகிறது. பா.ரஞ்சித் மற்றும் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார் சூர்யா. டிரைலரில் ஆர்யாவின் மொத்த உழைப்பும் தெரிகிறது. இப்படத்திற்காக அவர் எவ்வளவு மெனக்கெட்டார் என்பதை டிரைலர் பார்க்கும்போதே தெரிகிறது.




