அமெரிக்கா, இங்கிலாந்தில் தி ராஜா சாப் முன்பதிவில் சாதனை | 30 நாட்களில் 1,240 கோடி வசூலித்த துரந்தர் | சிவகார்த்திகேயனுடன் பேசுவதைத் தவிர்த்தாரா விஜய் ? | லோகா வாய்ப்பை மறுத்தீர்களா ? கேள்வியால் டென்ஷனான பார்வதி | பிளாஷ்பேக்: கலைஞர்கள் பேசாமல், பார்வையாளர்கள் பேசிய மவுனத் திரைப்படம் “பேசும்படம்” | 15 ஆண்டுகளுக்குபின் மங்கத்தா ரீ ரிலீஸ் : அஜித் ரசிகர்கள் போடும் திட்டம் | சென்சார் சான்றிதழ் வரலையா : டென்ஷனில் பராசக்தி, ஜனநாயகன் குழு | ஓமனில் டிரக்கிங் சென்ற பாடகி சித்ரா ஐயரின் சகோதரி உயிரிழப்பு | பாலா தயாரிப்பில் படம் இயக்கப் போகும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்? | இயக்குனர் பாரதிராஜா உடல்நிலை எப்படி இருக்கிறது : இயக்குனர் ஆர்.கே.செல்வமணி தகவல் |

'களவாணி' படத்தின் மூலம் அறிமுகமான ஓவியா, மெரினா, கலகலப்பு, மதயானைக்கூட்டம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக ஓவியா பங்கேற்றார். சினிமாவை விட இந்நிகழ்ச்சியின் மூலம்தான் பிரபலமானார். ஆனால் அது சினிமா வாய்ப்பாக மாறவில்லை. சினிமாவில் வாய்ப்பு இல்லாததால் தற்போது ஒரு வெப் தொடரில் நடித்தார். சமீபத்தில்தான் இந்த தொடர் யூடியூப்பில் வெளியானது. தொடர்ந்து ஓவியா ஓடிடி தொடர்களில் நடிக்க ஆர்வம் காட்டி கதைகள் கேட்டு வருகிறார்.
சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சமூக நலனிலும், பெண்கள் நலனிலும் மிகுந்த அக்கறை கொண்டவர் ஓவியா. பல பொது பிரச்னைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இருக்கும் ஓவியா, கேஷுவலாக அமர்ந்திருக்கும் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.