பராசக்தி படத்தை வெளியிட தடையில்லை : நீதிமன்றம் உத்தரவு | பத்து நாள் ராஜாவாக சதீஷ் | சிறிய படங்களின் பிரச்னைகள் தீருமா? | ஜனநாயகன் டிரைலர் நாளை(ஜன., 3) வெளியீடு | புத்தாண்டை முன்னிட்டு எத்தனை படங்களின் அப்டேட் வந்தது தெரியுமா ? | தியேட்டர்களை எதிர்த்து ஓடிடியில் வெளியான 'சல்லியர்கள்' | தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா | 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! |

தமிழில் தனுஷ் நடித்த 'பட்டாஸ்' படத்தில் நாயகியாக நடித்தவர் மெஹ்ரீன் பிர்சடா. இவருக்கும் ஹரியானாவைச் சேர்ந்த அரசியல்வாதியான பவ்யா பிஷ்னாய் என்பவருக்கும் மார்ச் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
கொரோனா தொற்று பரவல் குறைந்ததும் இருவரும் திருமணம் செய்து கொள்வதாக திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தங்களது திருமணத்தை ரத்து செய்வதாக இருவரும் அறிவித்திருந்தனர். திருமணத்திற்கு முன்பே நிச்சயதார்த்தத்துடன் இருவரும் பிரிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இருவரும் அந்தமான் சென்றிருந்த போது கடலுக்கடியில் ஸ்கூபா டைவிங் செய்த போது மெஹ்ரீனிடம் பவ்யா பிஷ்னாய் காதலை சொல்லியிருந்தார். தங்களது திருமணத்தை சிறப்பாக நடத்த இருவரும் திட்டமிட்டிருந்த நிலையில் பிரிந்தனர்.
இந்நிலையில் தனது சமூக வலைத்தளங்களில் இருந்த திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை டெலிட் செய்துள்ளார் மெஹ்ரீன். தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க முடிவு செய்துள்ள மெஹ்ரீன் அது தொடர்பான பேச்சுவார்த்தைகளையும் ஆரம்பித்துவிட்டதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.