சரோஜாதேவி மறைவு: முதல்வர், திரைப்பிரபலங்கள் இரங்கல் | சிவாஜிகணேசன் - சரோஜா தேவி இணைந்த நடித்த படங்கள் | எம்ஜிஆர் - சரோஜா தேவி இணைந்து நடித்த 26 படங்கள் | சூப்பர் குட் பிலிம்ஸ் 99வது தயாரிப்பில் விஷால் | 'தாமரை நெஞ்சம்' ஒரு படம் போதுமே: பாலசந்தர் அளித்த பதில் | தமிழில் தனது கடைசி படத்தில் நடித்த சரோஜா தேவி | ‛வெள்ளி விழா' படங்களில் முத்திரை பதித்த சரோஜா தேவி : வரிசை கட்டிய விருதுகள் | தனது உயிர் சென்னையில் பிரிய வேண்டும் என்று பேசியிருந்த சரோஜா தேவி | புதிய போட்டி வந்தாலும், சம்பளத்தை உயர்த்திய அனிருத் | தங்கள் தனிப்பட்ட சண்டையை மேடையில் பேசிய விஜய் சேதுபதி, பாண்டிராஜ் |
ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து தமிழ்த் திரையுலகத்தில் பலரும் குரல் கொடுத்து வருகிறார். கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, விஷால் உள்ளிட்ட நடிகர்கள் அது குறித்த தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்கள்.
திரைப்பட சங்கங்களும் அவர்களது எதிர்ப்பு அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்கள். ஆனால், தமிழ் சினிமாவில் அதிக அளவில் வியாபாரத்தையும், வசூலையும் பெறும் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோர் இந்த மசோதா குறித்த தங்களது கருத்துக்களை இதுவரை பதிவு செய்யவில்லை.
அவர்கள் இப்படி எந்த ஒரு கருத்தையும் சொல்லாமல் மவுனமாக இருப்பது திரையுலகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்த் தற்போது அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார். விஜய் அவருடைய 'பீஸ்ட்' படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அஜித்திற்கு எந்தப் படப்பிடிப்பும் இல்லை, வீட்டில் தான் ஓய்வெடுத்து வருகிறார்.
ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா பற்றி அவர்களுக்கு கண்டிப்பாகப் போய்ச் சேர்ந்திருக்கும். இருந்தாலும் தங்கள் துறை சார்ந்த பிரச்சினைகளுக்குக் கூட அவர்கள் குரல் கொடுக்காமல் அமைதி காப்பது திரையுலகத்தினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சில நடிகர்கள் அவர்களது ஆலோசகர்கள் சொல்வதைக் கேட்டுத்தான் திரைப்படங்களில் நடிப்பதையே முடிவெடுப்பார்கள். அது போல, இந்த மசோதா விவகாரத்திலும் அவர்கள் ஆலோசனைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.