'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் பிக்பாஸ் சீசன்-3 மூலம் பரபரப்பு வளையத்துக்குள் வந்த வனிதா விஜயகுமார், அதன்பின் கடந்த வருடம் கொரோனா தாக்கம் பரவ ஆரம்பித்த சமயத்தில், பீட்டர்பால் என்பவரை மூன்றாவது மறுமணம் செய்துகொண்டு மீண்டும் பரபரப்பை உருவாக்கினார்.. ஆனால் வழக்கம்போல் இந்தமுறையும் அவரது திருமணம் தோல்வியில் முடிய, அதை மறக்கும் விதமாக, விஜய் டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்தார்.
இந்தநிலையில் ரம்யா கிருஷ்ணன் ஜட்ஜ் ஆக உள்ள பிக்பாஸ் ஜோடிகள் ரியாலிட்டி ஷோவில் சுரேஷ் சக்கரவர்த்தியுடன் (பிக்பாஸ் தாத்தா) ஜோடியாக பங்கேற்று வந்தார் வனிதா. ஆனால் சமீபத்தில்; இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக இரண்டு பக்கத்துக்கு கடிதம் எழுதி அதிர்ச்சி கொடுத்தார் வனிதா.
அதில் அவர் முக்கியமாக சீனியர் ஒருவர் தன்னை அவமரியாதை செய்யும் விதமாக நடத்தியதாக பெயர் குறிப்பிடாமல் கூறியிருந்தார். ஆனால் அவர் குறிப்பிட்டது ரம்யா கிருஷ்ணன் பற்றித்தான் என்றே பலரும் கூறுகிறார்கள். குறிப்பாக வனிதாவின் பெர்பாமன்ஸ்க்கு ஒருமுறை, பத்துக்கு ஒரு மதிப்பெண் கொடுத்தாராம் ரம்யா. இது வனிதாவை ரொம்பவே அப்செட் ஆக்கியதால் தான், வனிதா இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார்.
இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் ரம்யாவிடம் கேட்டபோது, “பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் என்ன நடந்ததென்று வனிதாவிடம் தான் கேட்க வேண்டும். சொல்லப்போனால் அதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை. இதுகுறித்து நான் கருத்து சொல்ல வேண்டும் என்றால் 'நோ கமெண்ட்ஸ் என்று தான் சொல்வேன்” என கூறியுள்ளார் ரம்யா கிருஷ்ணன்.