15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் |
38 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வரும் ரம்யாகிருஷ்ணன் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். தனது13 வயதிலேயே சினிமாவில் நடிகையாகிவிட்ட அவருக்கு தற்போது 50 வயதாகிறது. ரஜினியுடன் படையப்பாவில் நடித்திருந்த நீலாம்பரி கேரக்டரைத் தொடர்ந்து பாகுபலியில் நடித்த சிவகாமிதேவி போன்ற கதாபாத்திரங்கள் ரம்யாகிருஷ்ணனை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றவை.
இப்போதுவரை தனது திறமைக்கு சவால் விடக்கூடிய கதாபாத்திரங்களாக தேடிப்பிடித்து நடித்து வரும் ரம்யாகிருஷ்ணன், தனது குடும்ப நிகழ்ச்சிகளின்போது எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், தற்போது நீச்சல் குளத்தில் தான் கூலிங்கிளாஸ் அணிந்தபடி எடுத்த ஒரு ஸ்டைலான புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதைப்பார்த்து, ஐம்பது வயதானாலும் அந்த அழகும் ஸ்டைலும் அப்படியேதான் இருக்கு என்று நெட்டிசன்கள் கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.