இன்று ஸ்ரீலீலாவுக்கு பிறந்தநாள் : ரசிகர்கள் வாழ்த்து | தக் லைப் : ஓடிடி விலை, மறுபரிசீலனை பேச்சுவார்த்தை? | நானியை சந்தித்த 'டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் | ‛கலைமாமணி' பட்டம் பெற்ற நாட்டுப்புற பாடகி கொல்லங்குடி கருப்பாயி காலமானார் | டாப் இயக்குனர்களுடனான கூட்டணி சரிவு : கவனிப்பாரா கமல்ஹாசன் ? | ரஜிஷா விஜயனுக்கு கை கொடுக்கும் வருடமாக 2025 அமையுமா? | ஜோதிகா பட பெண் இயக்குனரின் படத்திற்கு கேரள அரசு வரி விலக்கு | பஹத் பாசில் பட தேசிய விருது கதாசிரியரின் இயக்கத்தில் நடிக்கும் 'ஜென்டில்மேன் 2' ஹீரோ | 'காந்தாரா-2' படப்பிடிப்பில் மீண்டும் ஒரு மலையாள நடிகர் மரணம் | பஹத் பாசில் - எஸ்ஜே சூர்யா படம் டிராப் ஏன்? மனம் திறந்த இயக்குனர் விபின் தாஸ் |
பாலா இயக்கிய அவன் இவன் படத்திற்கு பிறகு விஷால் - ஆர்யா இணைந்து நடித்துள்ள படம் எனிமி. ஆனந்த் சங்கர் இயக்கிய இப்படம் ஆக்சன், திரில்லர் கதையில் உருவாகிறது. இந்தபடத்தின் ஒரு பாடல் காட்சியும், சில பேட்ஜ் ஒர்க்கும் பேலன்ஸ் இருப்பதாக கூறுகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது தனது 31ஆவது படத்தின் படப்பிடிப்பிற்காக ஐதராபாத்தில் முகாமிட்டுள்ளார் விஷால். இந்த மாதம் முழுக்க படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்தநேரத்தில் வருகிற 9-ந் தேதி முதல் எனிமி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பும் 8 நாட்களுக்கு அதே ஐதராபாத்தில் நடக்கிறது. இந்த படப்பிடிப்பில் விஷால், ஆர்யா, பிரகாஷ்ராஜ், மிருணாளினி ஆகியோரும் கலந்து கொள்கிறார்களாம். அதற்காக இப்போதே ஐதராபாத்தில் முகாமிட்டிருக்கிறாராம் எனிமி டைரக்டர் ஆனந்த் சங்கர்.