சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
தமிழில் ஜெயம் படம் மூலமாக அறிமுகமாகி, அந்த ஒரே படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகை சதா. அதன்பிறகு ஒரு கட்டத்தில் ஷங்கர் இயக்கிய அந்நியன் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்தார். அதற்கு முன்னதாக, அறிமுகமான காலகட்டத்தில் சதாவுக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் வரவேற்பு இருந்ததால், நிறைய படங்களை ஒப்புக்கொண்டு நடித்து வந்தார் அந்த சமயத்தில் தான் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு தேடிவந்தது, ஆனால் சில சூழல் காரணமாக அவரால் அதை ஏற்க முடியாமல் போனது.
இது குறித்த தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் சதா. சந்திரமுகியில் நடிப்பதற்காக இரண்டு முறை வாய்ப்புகள் தேடி வந்தும் சில சூழல்கள் காரணமாக, அதில் நடிக்க முடியாமல் போனது. அதை நினைத்து நான் சில சமயம் அழுதும் இருக்கிறேன் என்று கூறியுள்ளார் சதா.
அதேசமயம் சினிமா வட்டாரங்களில் முதலில் இவரை மாளவிகா கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அழைத்ததாகவும் அதனால் இவர்தான் நடித்தால் கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என கூறி மறுத்துவிட்டார் என்றும் ஒரு தகவல் அந்த சமயத்திலேயே சொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.