ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி | இறுதிக்கட்டத்தில் 'கேர்ள் பிரண்ட்' : முதல் பாடல் வெளியீடு | புதுமுகங்களின் 'தி கிளப்' |
கேரளா அருகே அரபிக் கடலில் இருக்கிறது லட்சத் தீவுகள். இங்கு பல ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். இந்த தீவு மக்கள் மீது மத்திய அரசு பல்வேறு கெடுபிடிகளை கொண்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட மலையாள நடிகையும், இயக்குனருமான ஆயிஷா சுல்தானா "மத்திய அரசு, லட்சத் தீவு மக்கள் மீது பயோ வார் நடத்துவதாகவும், கொரோனாவை பரப்புவதாகவும்" குற்றம் சாட்டினார். இதனால் இவர் மீது தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஆயிஷாவுக்கு கேரள உயர்நீதி மன்றம் முன்ஜாமீன் வழங்கி உள்ளது.
இந்த நிலையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஆயிஷா சுல்தானா, ‛‛லட்சதீவில் என்ன நடக்கிறது என்பது குறித்தும், நான் தெரிவித்த கருத்தை தொடர்ந்து எனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் வைத்தும் ஒரு சினிமா இயக்கப் போகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.