பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
குக் வித் கோமாளி புகழ் அஸ்வின், புகழ் இணைந்து நடிக்கும் படத்திற்கு ‛என்ன சொல்லப்போகிறாய்' என தலைப்பு வைத்துள்ளனர். படத்தை அறிமுக இயக்குனர் ஹரிஹரன் இயக்குகிறார். இவர் அளித்த பேட்டி: காதல், காமெடி கலந்த இப்படத்தில் அஸ்வின், புகழ் நடிக்கின்றனர். இரண்டு நாயகியர் உள்ளனர். தேர்வு நடந்து வருகிறது. விவேக் மெர்வின் இசையமைக்கின்றனர். டிரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் படத்தை தயாரிக்கிறார்.
அவரிடம் கதை சொன்ன போது, அனைவரையும் தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்கு வகித்தார். தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் முடிவாகி விட்டது. விளம்பர படங்களை இயக்கிய எனக்கு, இது தான் முதல் படம். இப்படத்தில் இசைக்கு முக்கியத்துவம் இருக்கும். படத்தின் கலைஞர்கள் அனைவருக்கும் இப்படம் சவாலாக இருக்கும். ஜூலை 19ம் தேதி படப்பிடிப்பு சென்னையில் துவங்குகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.