பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” | ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் |

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ள அமலா பால் கடைசியாக நடித்த படம் ஆடை. இந்த படத்தைத் தொடர்ந்து அதோ அந்த பறவை போல, ஆடுஜீவிதம், கடாவர் உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் அமலா பால். தற்போது அவர் புதிதாக வெப் தொடர் ஒன்றில் நடித்து வருகிறார்.
இந்த வெப் தொடரை யூ டர்ன் படத்தை இயக்கி பிரபலமான பவன்குமார் இயக்கி வருகிறார். தெலுங்கில் தயாராகும் இந்த வெப் சீரிஸ் குடி யெடமைதே என்ற பெயரில் உருவாகிறது. பேண்டஸி த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த வெப் சீரிஸில் ராகுல் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஒரு போலீஸ் அதிகாரிக்கும், டெலிவரி பாய்க்கும் இடையே நடக்கும் டைம் லூப்பை முன் வைத்து நடக்கும் கதையாக இந்த வெப் சீரிஸ் உருவாகியுள்ளது. இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பும் முடிந்து தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வெப் சீரிஸ் ஓடிடி தளத்திற்காக தயாராகி வருகிறது. இந்நிலையில் மொத்தம் 8 எபிசோட்கள் இருக்கும் இந்த வெப் சீரிஸின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.