பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” | ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | கணவர் சித்ரவதை செய்வதாக பாலிவுட் நடிகை வழக்கு | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் |

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் விஜய்யை அவரது ரசிகர்கள் பலரும் தலைவா என்று அழைத்து மகிழ்வது போல, விஜய் தலைவா என அழைத்து மகிழும் நடிகர் யார் என்ற தகவலை அவருடன் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்த மாளவிகா மோகனன் பகிர்ந்து கொண்டுள்ளார். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடன் பணியாற்றிய நட்சத்திரங்கள் சிலர் சோஷியல் மீடியா கிளப் மீட்டிங்கில் ஒன்று கூடி விஜய் உடனான தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
அந்தவகையில் மாளவிகா கூறும்போது, ‛‛விஜய் பாலிவுட் இளம் நடிகர் டைகர் ஷெராப்பின் தீவிர ரசிகர். ஒருமுறை நாங்கள் சிலர் குழுவாக அமர்ந்து டைகர் ஷெராப் படம் ஒன்றை பார்த்தோம். அப்போது டைகர் ஷெராப் தோன்றும் அறிமுக காட்சியில் விஜய் எழுந்து நின்று தலைவா என கத்தி ஆரவாரம் செய்தாராம். விஜய்யின் ஜாலியான இன்னொரு பக்கத்தை அப்போது தான் பார்த்தேன்” என கூறியுள்ளார் மாளவிகா மோகனன்.
விஜய்யுடன் பிகில் படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப்பின் மகன் தான் இந்த டைகர் ஷெராப் என்பது குறிப்பிடத்தக்கது.