குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் இதுவரை தமிழைத் தவிர வேறு மொழிப் படங்களில் நடித்ததில்லை. ஆனாலும், அவருடைய தமிழ்ப் படங்கள் தென்னிந்திய மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகியவற்றில் நல்ல வசூலைக் குவித்து வருகிறது. அவர் நடித்து கடைசியாக வெளிவந்து 'மாஸ்டர்' படம் தெலுங்கில் குறிப்பிடத்தக்க வசூலை அள்ளியது.
அதையடுத்து தன்னுடைய அடுத்த படத்தை அவர் தமிழ், தெலுங்கு என பான் - இந்தியா படமாக்க திட்டமிட்டுள்ளார். 'பீஸ்ட்' படத்திற்குப் பிறகு விஜய் நடிக்க உள்ள அவரது 66வது படத்தை தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நிறுவனமான தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இன்று இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்தை மட்டும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
“தளபதி விஜய்க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்” என அவர்களது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் விஜய்யின் 66வது படம் அவர்கள் தான் தயாரிக்க உள்ளார்கள் என்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனத் தெரிகிறது.
கமல் வாழ்த்து
நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில், ‛‛தன் திறமையாலும் அன்பாலும் தமிழ் உள்ளங்களை வசீகரித்துள்ள என் அன்புத் தம்பி விஜய்க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்'' என பதிவிட்டுள்ளார்.
இவரைப்போன்று ஏகப்பட்ட திரைப்பிரபலங்கள் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளர்.