4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | கணவர் சித்ரவதை செய்வதாக பாலிவுட் நடிகை வழக்கு | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் | கதைநாயகன் ஆன பரோட்டா முருகேசன் | இந்த வார ரீ ரிலீஸில், 'அட்டகாசம், அஞ்சான்' |

கோ படத்தில் இயக்குனர் கே.வி.ஆனந்தால் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகை கார்த்திகா. பிரபல சீனியர் நடிகை ராதாவின் மகளான இவருக்கு, பின் வந்த நாட்களில் தனது தாயின் புகழ் எந்தவிதத்திலும் கைகொடுக்கவில்லை. அன்னக்கொடி, புறம்போக்கு ஆகிய படங்களும் இவரை ஏமாற்றின. அருண் விஜய்யுடன் சில வருடங்களுக்கு முன் நடித்த வா டீல் படம் இன்னும் ரிலீஸாகாமல் இருக்கிறது.
தவிர இந்தியில் அர்னாப் என்கிற சீரியலிலும் நடித்தார் கார்த்திகா. கடந்த இரண்டு வருடங்களாகவே பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத கார்த்திகா, இனியும் சினிமா வாய்ப்பு வரும் என காத்திருக்க விரும்பவில்லையாம். அதனால் நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு, தான் தற்போது பொறுப்பு வகித்து வரும் யுடிஎஸ் குரூப் ஆப் ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் பணியையே தொடர முடிவு செய்துள்ளாராம் கார்த்திகா. மேலும் இனி சினிமா பக்கமே திரும்புவதில்லை என்றும் முடிவெடுத்துள்ளாராம் கார்த்திகா,.