நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் ஒருவர் சூரி. சினிமாவில் பல ஆண்டுகளாக கடின முயற்சிக்குப் பின்னர் தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பெற்றுள்ளார். பிக்பாஸ் முகேன் நடிப்பில் உருவாகியுள்ள 'வேலன்' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் 'விடுதலை' படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். ரஜினியின் 'அண்ணாத்த' படத்திலும் சூரி நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஊரடங்கு காலம் என்பதால் மற்ற நடிகர்களைப் போலவே சூரியும் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வருகின்றனர். அதே நேரம் கொரோனா பற்றி பல்வேறு விழிப்புணர்வு வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். இன்று சர்வதேச யோகா தினம் என்பதால் வித்தியாசமான கோணத்தில் யோகா செய்யும் படத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, சூழலில், உடல் நலம் மன நலம் இரண்டையும் பாதுகாப்பது பேரவசியம்... அந்த பாதுகாப்பு தரும் அற்புத கலை யோகா. உலக யோகா தினம் நல்வாழ்த்துகள்'. சூரியின் யோகா படம் வைரலாகி வருகிறது.