பாடல்கள் ஹிட்டாவதற்கு 'ரீல்ஸ்' வீடியோக்கள்தான் முக்கியமா? | ரஷ்மி முரளி: தோழி நடிகையைத் தேடிய ரசிகர்கள் | விஜய் படம் ரீ-ரிலீசா… அப்போது அஜித் படமும் ரீ-ரிலீஸ்… | விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா தம்பதிக்கு பெண் குழந்தை | WWE-ல் ராணா டகுபட்டிக்குக் கிடைத்த பெருமை | வீர தீர சூரன் ஓடிடி வாங்கிய விலை இவ்ளோதானா? | ஓடிடி-யில் பெரும் விலைக்கு மோகன்லாலின் எல் 2 :எம்புரான் | புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே |
சமீபத்தில் திரைக்கு வந்த கல்கி 2898 ஏடி என்ற படத்தில் நடித்திருந்தார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே. இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே கர்ப்பமாக இருந்த அவர், இப்பட பிரமோஷன் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இந்த நிலையில் தற்போது தரையில் படுத்துக் கொண்டு சுவற்றில் கால்களை மட்டும் உயர தூக்கியபடி யோகா செய்யும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருக்கிறார்.
இது குறித்து தீபிகா படுகோனே வெளியிட்டுள்ள பதிவில், ‛‛இது போன்ற யோகா பெண்களின் தசைகள், மூட்டுகள், கணுக்கால், பாதங்களில் ஏற்படும் வலியை போக்குகின்றன. அதோடு முதுகின் கீழ் புறத்தில் அழுத்தத்தை குறைக்கவும், சோர்வான உணர்வுகளை போக்குவதற்கும் இந்த யோகா பயன்படுகிறது. உடலை அழகாக வைத்திருப்பதற்கு மட்டுமின்றி ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் இந்த பயிற்சியை நான் செய்கிறேன். உடற்பயிற்சியில் ஈடுபட முடியாத நாட்களில் இந்த எளிய யோகா பயிற்சியை ஐந்து நிமிடங்கள் செய்கிறேன். இது எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது'' என்று தெரிவித்திருக்கிறார் தீபிகா படுகோனே.