ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி | தேங்கி கிடந்த 'சுமோ' ஏப்., 25ம் தேதி திரைக்கு வருகிறார் | பெல்ஜியம் கார் ரேஸ் : இரண்டாம் இடம் பிடித்த அஜித் அணி |
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிக்க, கன்னடத்தில் 2018ம் ஆண்டு வெளிவந்த படம் 'கேஜிஎப்'. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது.
இப்படத்தின் இரண்டாம் பாகமான 'கேஜிஎப் 2' படத்தில் ஹிந்தி நடிகர் சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டவர்களும் நடித்துள்ளார்கள். இப்படத்தின் டீசர் ஜனவரி மாதம் வெளிவந்து பெரும் சாதனையைப் படைத்தது.
இப்படத்தை ஜுலை 16ம் தேதி வெளியிடப் போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். ஆனால், தற்போதுள்ள சூழ்நிலையில் தியேட்டர்களைத் திறப்பது எப்போது என்பது தெரியாமல் உள்ளது. சில மாநிலங்களில் ஜுலை 1 முதல் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்தியா முழுவதும் தியேட்டர்களைத் திறந்த பிறகு, 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கொடுத்த பிறகு படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.
படத்திற்கான இறுதிக்கட்டப் பணிகளும் தாமதமாக நடைபெறுவதால் ஜுலை 16ல் படம் நிச்சயம் வெளியாக வாய்ப்பில்லை என்பது உறுதி. விரைவில் படத்தின் புதிய வெளியீட்டுத் தேதியை அறிவிக்க உள்ளதாகவும் தெரிகிறது.