மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

ஹாலிவுட் படத்தில் நடித்து முடித்துவிட்ட நடிகர் தனுஷ், விரைவில் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து சில நாட்கள் ஓய்வெடுத்த பின் மீண்டும் அவர் ஏற்கனவே நடித்து வந்த கார்த்திக் நரேன் படத்தில் நடிக்க உள்ளார். இதையடுத்து அண்ணன் செல்வராகன் இயக்கும் நானே வருவேன், ராம்குமார் இயக்கும் ஒரு படம் என தனுஷ் கைவசம் படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
இந்நிலையில் இன்று(ஜூன் 18) தனுஷின் அடுத்தப்பட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதை பிரபல தெலுங்கு இயக்குனரும், தேசிய விருது பெற்றவருமான சேகர் கம்முலா இயக்குகிறார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி நிறுவனம் சார்பில் நாராயண் தாஸ் கே நாரங் மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோர் தயாரிக்கின்றனர். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் . இந்த படத்தின் படப்பிடிப்பை இந்த ஆண்டில் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள் .