2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஆர்யாவுடன் இணைந்து நடித்து வந்த எனிமி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதை அடுத்து தனது 31ஆவது படத்தின் படப்பிடிப்பை நேற்று முதல் ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியிருக்கிறார் விஷால். து.பா.சரவணன் இயக்கும் இந்த படத்தில் டிம்பிள் ஹயாத்தி நாயகியாக நடிக்க, விஷாலே தயாரிக்கிறார்.
அதிரடியான ஆக்சன் கதையில் உருவாகும் இந்த படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. ஒரேகட்டமாக இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தி ஜூலை இறுதிக்குள் படத்தை முடித்து விடவும் திட்டமிட்டுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கொரோனா பிரச்னையால் தமிழகத்தில் படப்பிடிப்பு துவங்க அனுமதி அளிக்கப்படாத சூழலில் ஐதராபாத்தில் அனுமதி அளிக்கப்பட்டதன் காரணமாக இதன் படப்பிடிப்பை அங்கு துவங்கி உள்ளார் விஷால்.