மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
திரையுலகில் வேறு எந்த ஒரு இயக்குனருக்கு இப்படி ஒரு பெருமை கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான். தமிழில் 'மாநகரம்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். முதல் படத்திலேயே தன்னுடைய தனி முத்திரையைப் பதித்தவர். அடுத்து இயக்கிய 'கைதி, மாஸ்டர்' இரண்டும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்றன. அடுத்து கமல்ஹாசன் நாயகனாக நடிக்கும் 'விக்ரம்' படத்தை இயக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ்.
இவரது இயக்கத்தில் வெளிவந்த மூன்று படங்களுமே அடுத்தடுத்து ஹிந்தியில் ரீமேக் ஆவது நிச்சயம் பெருமையான ஒன்றுதான். 'மாநகரம்' படத்தை பிரபல ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் ஹிந்தியில் ரீமேக் செய்து இயக்கி வருகிறார். இப்படத்தில் விக்ராந்த் மாசே, விஜய் சேதுபதி நடித்து வருகிறார்கள். 'கைதி' படத்தின் ரீமேக்கில் அஜய் தேவகன் நாயகனாக நடிக்க உள்ளார். இப்படத்தின் மற்ற தேர்வுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 'மாஸ்டர்' படத்தின் ரீமேக்கில் சல்மான் கான் நடிக்க உள்ளார் என கடந்த சில நாட்களாகவே பரபரப்பாக உள்ளது.
மேலே குறிப்பிட்ட மூன்று படங்களும் அடுத்த ஆண்டில் அடுத்தடுத்து ஹிந்தியில் வெளிவரும் வாய்ப்புகள் நிறையவே உண்டு.