நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கர்நாடகாவை சேர்ந்த அமித் பார்கவ், கல்யாணம் முதல் காதல் வரை, அச்சம் தவிர், நெஞ்சம் மறப்பதில்லை, மாப்பிள்ளை, கண்ணாடி, கண்மணி தொடர்களில் நடித்தார். தற்போது திருமதி ஹிட்லர் தொடரில் நடித்து வருகிறார். இதற்கிடையில் விழி மூடி யோசித்தால், என்னமோ ஏதோ, குற்றம் 23, சார்லி சாப்ளின் 2, சக்ரா உள்பட சில படங்களிலும் நடித்தார்.
இவர் சின்னத்திரை தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சனியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் சில படங்களில் பாடி உள்ளார். சில படங்களில் நடித்தும் உள்ளார். தற்போது இருவரும் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து புதுக்கோட்டை, தஞ்சாவூர் பகுதிகளில் கொரோனா மருத்துவ பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக தேவைப்படும் மருத்துவ மனைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள், மற்றும் செறிவூட்டிகளை வாங்கி கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
இதுகுறித்து அமித்பார்கவ் கூறியதாவது: தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மக்களின் உயிர்காக்க ஆக்சிஜன் செறிவூட்டிகள் அதிக அளவில் தேவைப்படுகின்றன. மாவட்டத்திலுள்ள மருத்துவமனைகள் பலவற்றில் ஆக்சிஜன் தட்டுப்பாடும், மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடும், ஆம்புலன்ஸ் தேவையும் உள்ளது.
இந்நிலையில், கிரவுட் பண்டிங் தளத்தின் வாயிலாக, இதற்காக நிதி திரட்டி வருகிறோம். இதனை, ஆக்சிஜன் செறிவூட்டிகள் வாங்கவும், ஆம்புலன்ஸ் சேவைகளை அதிகரிக்கவும் பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கிறோம். இதுவரை நாங்கள் திரட்டியுள்ள பணத்தின் மூலம் 5 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வாங்கப்பட்டுள்ளன. அவை பேராவூரணி, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
தஞ்சை பகுதியின் தேவையைத் தீர்க்க இன்னும் 16 ஆக்சிஜன் செறிவூட்டிகள் தேவைப்படுகின்றன. மக்களின் உயிர்காக்கும் இந்தப் பணியில் நல் உள்ளம் கொண்டோர் எங்களோடு இணைய வேண்டும். என்கிறார் அமித் பார்கவ்.