15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு |
பழம்பெரும் இசையமைப்பாளரும், பாடகருமான கண்டசாலாவின் இரண்டாவது மகன் கண்டசாலா ரத்னகுமார். இவர் நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட டிவி தொடர் எபிசோடுகளுக்குக் குரல் கொடுத்திருக்கிறார்.
ஒரு மொழியில் வெற்றி பெற்று வரவேற்பைப் பெற்ற படங்கள் வேறு மொழிகளுக்கு டப்பிங் செய்யப்படும் போது அப்படங்களில் நடித்துள்ள ஹீரோக்களுக்கு ரத்னகுமார் தான் டப்பிங் கொடுப்பார்.
கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக அவர் குரல் கொடுக்காத ஹீரோக்களே இல்லை என்று சொல்லலாம். மேலும், தொடர்ந்து 8 மணி நேரம் டப்பிங் பேசி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸிலும் இடம் பிடித்துள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கொரோனாவிலிருந்து மீண்டு குணமடைந்து வீடு திரும்ப வேண்டிய நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார்.
மறைந்த ரத்னகுமாருடைய மகள் வீணா கண்டசாலா பிரபல பாடகியாகவும், டப்பிங் கலைஞராகவும் இருக்கிறார். ரத்னகுமார் மறைவுக்குத் தெலுங்குத் திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெவித்துள்ளார்கள்.