'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
பிரபாஸ், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்து வரும் படம் 'ராதே ஷ்யாம்'. இப்படத்தை தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிட உள்ளார்கள்.
சுமார் 300 கோடி ரூபாய் செலவில் இப்படம் எடுக்கப்பட்டு வருவதாகச் சொல்கிறார்கள். இன்னும் சில காட்சிகளை படமாக்கிவிட்டால் படப்பிடிப்பு முடிவடைந்துவிடும். அதற்கு முன்னதாக மற்ற பணிகளை தற்போது செய்து வருகிறார்களாம்.
இதனிடையே, இப்படத்தின் அனைத்து விதமான உரிமைகளையும் சுமார் 400 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிக் கொள்ள அமேசான் நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்துவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அனைத்து மொழிகளுக்குமான ஓடிடி உரிமை, சாட்டிலைட் உரிமை என படத்தின் ஒட்டுமொத்த உரிமையும் அந்த 400 கோடியில் அடங்கும் என்கிறார்கள்.
பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வரும் படத்தை எப்படி ஓடிடி தளத்தில் வெளியிடுவது என தயாரிப்பு நிறுவனமும் யோசித்து வருகிறதாம். எனவே, வரும் தசரா விடுமுறையில் தியேட்டர்களில் படத்தை வெளியிடவும் தயாரிப்பாளர் தயாராகி வருவதாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.
ஜுலை மாதம் தெலுங்கு மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்கப்படலாம் என்கிறார்கள். அப்போது மக்கள் எப்படி வருகிறார்கள் என்பதைப் பொறுத்து 'ராதேஷ்யாம்' படத்தின் வெளியீட்டை முடிவு செய்யலாம் என்றும் தெரிகிறது.