லோகா ஒளிப்பதிவாளருக்கு விலை உயர்ந்த வாட்ச் பரிசளித்த கல்யாணி பிரியதர்ஷன் | நானி படத்தை இயக்கும் ஓஜி இயக்குனர் ; பூஜையுடன் படம் துவங்கியது | தீவிரமாக களரி பயிற்சி கற்று வரும் இஷா தல்வார் | தொடரும் பட இயக்குனரின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் ஹீரோவாக நடிக்கும் பிரித்விராஜ் | மகளின் நிர்வாண புகைப்படத்தை அனுப்ப சொன்னார்கள் : அக்ஷய் குமார் அதிர்ச்சி தகவல் | அப்ப தியேட்டரில் ஓடின இப்ப, செல்போனில் ஓடுது : நடிகை லதா | பல ஆண்டுகளுக்குபின் வெளியாகும் கும்கி 2 | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு பிப்.,யில் டும் டும் : ரகசியமாய் நடந்ததா நிச்சயதார்த்தம் | விஷ்ணு எடவனை டிக் செய்த விக்ரம் | ஏஐ ஆபத்து, சட்ட நடவடிக்கை தேவை : ஷ்ரத்தா ஸ்ரீநாத். |
சமூக வலைத்தளங்களில் டுவிட்டர் தளம் மட்டும்தான் குறைந்தபட்ச தரம் கூட இல்லாமல் அதன் பயனாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பல போலி கணக்குகள் டுவிட்டர் தளத்தில் மலிந்து கிடக்கின்றன. பிரபலங்களின் பெயர்களில் கூட பல போலி கணக்குகள் உள்ளன. அவற்றை நீக்க டுவிட்டர் நிறுவனம் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது உண்மை.
இரு தினங்களுக்கு முன்பு கூட மணிரத்னம் பெயரில் ஒரு போலி கணக்கு ஆரம்பமானதைப் பற்றி அவரது மனைவி சுஹாசினி எச்சரிக்கை விடுத்திருந்தார். வடிவேலு, யோகி பாபு, கவுண்டமணி, ஜனகராஜ் உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்களின் பெயர்களில் கூட போலி கணக்குகள் செயல்பட்டு வருகின்றன.
மேலும், பலர் போலி கணக்குகளால் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தி கிண்டலடிப்பது, சண்டை போடுவது என விஷயங்களைச் செய்து வருகின்றனர். அப்படிப்பட்ட கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமீப காலமாக பலர் குரல் கொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகை ராதிகா சரத்குமார் டுவிட்டர் தளம் பற்றிய தனது அதிருப்தியை கோபமாக வெளியிட்டுள்ளார்.
“சில நேரங்களில் சில மூளையில்லாத, வேலையில்லாத டுவீட்களைப் பற்றி நாம் கவனமாக இருக்க வேண்டும். இந்த உலகத்தை நாம்தான் காக்கிறோம் என்ற எண்ணம் கொண்ட பலர் இப்போது இருக்கிறார்கள். இன்டர்நெட்டில் நீங்கள் எப்படி இருக்க நினைக்கிறீர்களோ அப்படி இருக்கலாம். முட்டாள்தனமான பலவற்றைப் பார்க்கிறேன். எனது நேரத்தையும், சக்தியையும் இனிமேல் வீணாக்க விரும்பவில்லை,” எனக் குறிப்பிட்டுள்ளார்.