ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. கதாநாயகியாக ஐஸ்வர்ய லட்சுமி நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் நடித்துள்ளார். விரைவில் இந்தப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள நிலையில், இந்தப்படம் குறித்த தகவல்களை அவ்வப்போது சில பேட்டிகளில் பகிர்ந்து கொண்டு வருகிறார் கார்த்திக் சுப்பராஜ்
இந்தப்படத்தில் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் நடித்துள்ள கதாபாத்திரத்தில் முதலில் எஸ்.ஜே.சூர்யாவை நடிக்க வைக்கலாம் என்று தான் முடிவு செய்திருந்தாராம் கார்த்திக் சுப்பராஜ். ஏற்கனவே இறைவி படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளார்கள்.. ஆனாலும் அவரது கால்ஷீட் பிசியாக இருந்ததால் அந்த சமயத்தில் மலையாளத்தில் வெளியான 'சொள' மற்றும் 'ஜோசப்' ஆகிய படங்களில் ஜோஜு ஜார்ஜின் நடிப்பை பார்த்ததும் இவர் தான் சரியான ஆள் என ஒப்பந்தம் செய்துவிட்டாராம் கார்த்திக் சுப்பராஜ்.