ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் | இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை | பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார் |

இந்தியில் அமிதாப் பச்சனை வைத்து 'பா', 'சீனிகம்' என வித்தியாசமான படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர் இயக்குனர் பால்கி. அதன்பிறகு அமிதாப் பச்சனையும் தனுஷையும் இணைத்து இந்தியில் 'ஷமிதாப்' என்கிற படத்தை இயக்கினார் பால்கி. மேலும் அக்சய் குமாரை வைத்து 'பேடு மேன்' என்கிற படத்தை இயக்கிய பால்கி, கடைசியாக மிஷன் மங்கள் படத்திற்கு கதையும் எழுதியிருந்தார். இந்தநிலையில் அவர் அடுத்தததாக துல்கர் சல்மான் நடிக்கும் படத்தை இந்தியில் இயக்குகிறார் என சொல்லப்பட்டது.
தற்போது தானும் பால்கியும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இந்தப்படம் குறித்த தகவலை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளார். ஆம். இந்தப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம்..தான் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.. இதுவரை பால்கி இயக்கிய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, இருக்கை நுனியில் அமரவைக்கும் சைக்காலஜிக்கல் த்ரில்லர் படமாக இது உருவாக இருக்கிறதாம். ஏற்கனவே கார்வான், தி சோயா பேக்டர் என இரண்டு இந்திப்படங்களில் நடித்துள்ள துல்கர் சல்மானுக்கு இந்தியில் இது மூன்றாவது படமாகும்.