லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனை நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் படப்படிப்பு பூந்தமல்லி அருகில் உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் செட் அமைக்கப்பட்டு நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த வாரம் இங்கு படப்பிடிப்பில் ஈடுபட்ட 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
ஆனாலும் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் ஒரு சில நாட்களே பாக்கி உள்ள நிலையில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வந்தது. தமிழகத்தில் கொரோனா அதிகமாக பரவியதால், படப்பிடிப்பு நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியும், படப்பிடிப்பில் ஊழியர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று அறிவித்தார்.
இதையும் மீறி படப்பிடிப்பு நடந்து வந்ததால் நேற்று திருவள்ளூர் மாவட்ட வருவாய் அதிகாரி ப்ரீத்தி பார்கவி, பூந்தமல்லி தாசில்தார் சங்கர், உதவி கமிஷனர் சுதர்சன் ஆகியோர் தலைமையில் சென்ற அரசு அதிகாரிகள் நிகழ்ச்சி தயாரிப்பு நிர்வாகத்திடம் விசாரணை செய்தனர். அப்போது படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்ததை உறுதி செய்தனர்.
அதைத் தொடர்ந்து, படப்பிடிப்பை உடனடியாக நிறுத்தும்படி உத்தரவிட்டனர். மேலும் அங்கு இருந்த நடிகர், நடிகைகளை வெளியேற்றினர். ஷூட்டிங் நடைபெற்ற பிக் பாஸ் வீட்டை பூட்டி சீல் வைத்தனர். மேலும் ஷூட்டிங் நடத்திய நிறுவனத்துக்கு ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.