புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
நேரம் மற்றும் பிரேமம் என இரண்டு படங்கள் மூலம் மலையாளம் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். பிரேமம் என்கிற படத்தின் சூப்பர் ஹிட் வெற்றியை தொடர்ந்து, ஆறு வருடங்களாக படம் இயக்காமல் இருந்த அல்போன்ஸ் புத்ரன், தற்போது தான் பஹத் பாசில், நயன்தாரா நடிப்பில் பாட்டு என்கிற படத்தை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளார். கொரோனா காலகட்டம் என்பதால், இன்னும் படப்பிடிப்பு துவங்கவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் தனது சோசியல் மீடியா பக்கத்தில் ரசிகர்களுடன் சாட்டிங் செய்து கொண்டிருந்த அல்போன்ஸ் புத்ரன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு ஏற்ற, கதை ஒன்றை தான் ஏற்கனவே உருவாக்கி வைத்திருப்பதாக கூறியுள்ளார்.
பிரேமம் படம் வெற்றியடைந்த சமயத்திலிருந்து, ரஜினிகாந்தை தான் சந்திப்பதற்கு முயற்சித்து வருவதாகவும், ஆனால் இன்றைய நாள் வரை அதற்கான வாய்ப்பு எனக்கு அமையவில்லை என்றும் கூறியுள்ள அல்போன்ஸ் புத்திரன், நிச்சயம் ரஜினிகாந்த் உடனான சந்திப்பு மட்டும் நிகழ்ந்து விட்டால், அவரை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை பெற்று விடுவேன் என்றும் உறுதிபடக் கூறியுள்ளார். ரஜினிகாந்த் தற்போது இளம் இயக்குனர்களின் டைரக்சனில் தொடர்ந்து நடித்து வரும் நிலையில், அல்போன்ஸ் புத்ரனுக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என நம்பலாம்.