தீபாவளிக்கு வெளியாகும் 'கருப்பு' படத்தின் முதல் பாடல்! | கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் | ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் | பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் |
ரஜினிகாந்த் நடித்த 'காலா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஹிந்தி நடிகை ஹுமா குரேஷி. தற்போது அஜித் நடிக்கும் 'வலிமை' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். டில்லியைச் சேர்ந்த ஹுமா அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை ஒன்றை உடனடியாக ஆரம்பிக்க 'சேவ் த சில்ட்ரன்' அமைப்புடன் இணைந்து நிதி திரட்டி வருகிறார்.
கடந்த நான்கு நாட்களில் இதற்காக 36 லட்சம் வரை சேர்த்திருக்கிறார்கள். 2 கோடி வரை நிதி சேர்க்க வேண்டுமென திட்டமிட்டுள்ளார்களாம். 100 படுக்கைகளையும் ஏழை நோயாளிகளுக்காகப் பயன்படுத்த வேண்டுமென்று திட்டமிட்டுள்ளார்களாம். இதற்காக தனியாக ஆக்சிஜன் பிளான்ட் ஒன்றையும் நிறுவும் திட்டமும் உள்ளதாம்.
தனது சொந்த ஊரில் தனக்கு அருகாமையில் உள்ள மக்கள் படும் சிரமங்களைப் பார்த்து ஹுமா குரேஷி இந்த நிதி சேர்க்கும் திட்டத்திற்கு உதவி வருகிறாராம். டில்லியைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள பிற நகரங்களிலும் இப்படி மருத்துவமனைகளை அமைக்கும் திட்டமிட்டுள்ளார்களாம்.