'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
மலையாளத்தில் கடந்த 2019ல் மோகன்லால் நடிப்பில், முதன்முதலாக நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான லூசிபர் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை நடிகர் ராம்சரண், தனது தந்தை சிரஞ்சீவிக்காக கைப்பற்றினார். ஆரம்பத்தில் சாஹோ பட இயக்குனர் சுஜீத் தான், இதன் ரீமேக்கை இயக்குவதாக சொல்லப்பட்டது. அதன்பின் இயக்குனர் வி.வி.விநாயக் பெயர் அடிபட்டது. ஆனால் இவர்கள் லூசிபர் படத்தின் கதையை தெலுங்கிற்கு ஏற்றமாதிரி மாற்றி, சிரஞ்சீவியை கவர தவறிவிட்டார்கள்.
அதன்பின்னர் தான் ரீமேக் படங்களை அந்தந்த மொழிக்கு ஏற்ப பக்காவாக இயக்குபவர் என பெயரெடுத்த இயக்குனர் மோகன் ராஜா, லூசிபர் ரீமேக்கை இயக்குவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் அவரும் இந்தப்படத்தில் நீடிப்பாரா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
காரணம் லூசிபர் படத்தை தெலுங்கிற்கு ஏற்றபடி, மாற்றும்படி சிரஞ்சீவி கூறியதை, மோகன்ராஜாவால் அவரது திருப்திக்கு ஏற்ப மாற்ற முடியவில்லையாம். அப்படி அவர் செய்த மாற்றங்கள் சிரஞ்சீவியை ஈர்க்காததால், படத்திற்கு வேறு ஒரு இயக்குனரை ஒப்பந்தம் செய்யலாமா என மகன் ராம்சரணுடன் ஆலோசித்து வருகிறாராம் சிரஞ்சீவி.