‛துப்பாக்கி 2': ஐடியா பகிர்ந்த ஏ.ஆர்.முருகதாஸ் | சிரிக்க முடியாத நகைச்சுவை நடிகர்கள்!: மதுரை முத்து | ‛ஓ.ஜி' படத்திலிருந்து பிரியங்கா மோகன் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! | ‛திரிஷ்யம் 3' படத்தின் படப்பிடிப்பு எப்போது? புதிய தகவல் இதோ! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் புதிய கூட்டணி! | பராசக்தி படத்தில் இணைந்த அப்பாஸ்! | மீசைய முறுக்கு 2ம் பாகம் உருவாகிறதா? | சரிந்த மார்க்கெட்டை காப்பாற்ற அதிரடி முடிவெடுத்த தாரா | உயர பறந்த 'லிட்டில் விங்ஸ்' : சாதனையை பகிரும் இயக்குநர் நவீன் மு | தோழிகளால் நடிகை ஆனேன்: சுபா சுவாரஸ்யம் |
'சக்ரா' படத்திற்குப் பிறகு விஷால் தற்போது நடித்து வரும் படம் 'எனிமி'. இந்தப் படத்தை அடுத்து விஷால் நடிக்கும் அவரது 31வது படம் இன்று(மே 6) பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது. 'எது தேவையோ அதுவே தர்மம்' என்ற குறும்படத்தை இயக்கிய து பா சரவணன் இப்படத்தை இயக்க உள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தில் டிம்பிள் ஹயாதி கதாநாயகியாக நடிக்கிறார்.
விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடித்து வெளிவந்த 'தேவி 2' படத்தில் இவர் ஒரு முக்கியமில்லாத கதாபாத்திரத்தில் நடித்தவர். 2017ல் வெளிவந்த 'கல்ப்' என்ற தெலுங்குப் படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது 'கில்லாடி, ஆர்ஆர்ஆர்' ஆகிய தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார்.
பொதுவாக விஷால் பிரபலமான நடிகைகளுடன்தான் ஜோடி சேர்ந்து நடிப்பார். ஆனால், இந்தப் படத்தில் ஒரு வளரும் நடிகையை அவருடைய ஜோடியாக நடிக்க தேர்ந்தெடுத்திருப்பது ஆச்சரியமாக உள்ளது..