பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
விஷ்ணு விஷால் நடித்த படங்களில் அவருக்கு பெரிதும் புகழை பெற்றுத் தந்த படங்களில் ராட்சசன்-ம் ஒன்று. இதனை ராம்குமார் என்ற புதுமுகம் இயக்கி இருந்தார். அமலாபால், முனீஸ்காந்த், காளி வெங்கட் நடித்த இந்தப் படம் 3 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்தது.
இந்தப் படத்துக்குப் பிறகு தனுஷ் படத்தை இயக்க ஒப்பந்தமானார் ராம்குமார். கொரோனா அச்சுறுத்தலால் அந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் விஷ்ணு விஷாலின் வேண்டுகோளுக்கு இணங்க ராட்சசன் 2 படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளை முடித்து விட்டார் ராம்குமார்.
தனுஷ் படத்தை முடித்துக் கொடுத்த பிறகு ராட்சசன் 2 பணிகள் தொடங்குகிறார் ராம்குமார். இதுகுறித்து விஷ்ணு விஷால் கூறும்போது: ராட்சசன் 2ம் பாகத்தில் கதை தயாராக இருக்கிறது. நான் என் கைவசம் உள்ள படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும். ராம்குமார் அவர் கமிட்டாகி இருக்கும் ப்ராஜக்டுகளை முடிக்க வேண்டும். அதன்பிறகு இருவரும் ராட்சசன் 2வில் இணைவோம். என்றார்.