பிளாஷ்பேக்: டி.ராஜேந்தர் 2 வேடங்களில் நடித்த படம் | பிளாஷ்பேக்: புராண படங்களில் நடித்து புகழ்பெற்ற பாலசுப்பிரமணியம் | கிண்டல் செய்த ரசிகருக்கு மாளவிகா மோகனன் கொடுத்த பதிலடி | நடிகர் ஸ்ரீ எழுதிய ஆங்கில நாவல் வெளியானது! | தக் லைப் படம் ரிலீஸை தடுத்தால் வழக்குப்பதிவு: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை! | குபேரா படத்திற்கு 19 இடங்களில் கட் கொடுத்த சென்சார் போர்டு | விஜய்யை தொடர்ந்து ரஜினியை இயக்குகிறாரா வினோத்? | அஜித் குமாரை நேரில் சந்தித்த யுவன் சங்கர் ராஜா | விக்ரம் பிரபுவின் ‛லவ் மேரேஜ்' டிரைலர் வெளியீடு | 50 கோடியில் காசி செட் : ராஜமவுலி படத்துக்காக தயாராகுது |
சிவா, பிரியா ஆனந்த் நடிப்பில் வெளியான வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. நடிகரும், திமுக இளைஞர் அணி தலைவருமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி. தொடர்ந்து விஜய் ஆண்டனி நடித்த காளி படத்தை இயக்கினார். இடையில் சில விழிப்புணர்வு குறும்படங்கள், இசை ஆல்பங்களை இயக்கினார்.
தற்போது மீண்டும் படம் இயக்கத் தயாராகி விட்டார். இதில் மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாசும், நடிகை லிஸியின் மகள் கல்யாணி பிரியதர்ஷனும் நடிப்பார்கள் என்று தெரிகிறது. பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார், அனிருத் இசை அமைக்கிறார். தற்போது படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகிறது.
படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய முறையான அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரும் என்று தெரிகிறது. ரொமாண்டிக் சஸ்பென்ஸ் த்ரில்லர் வகை படமாக இது உருவாக இருக்கிறது.