புதுமுகங்களின் 'தி கிளப்' | பிளாஷ் பேக்: தயாரிப்பாளர் ஆன எஸ்.எஸ்.சந்திரன் | பிளாஷ்பேக்: மலையாளத்தின் முதல் சூப்பர் ஸ்டார் | விக்ரம், பிரேம்குமார் கூட்டணி உருவானது எப்படி | ரஜினி, கமல் இணைவார்களா? : காலம் கனியுமா? | காளிதாஸ் 2 வில் போலீசாக நடித்த பவானிஸ்ரீ | 2040ல் நடக்கும் ‛ரெட் பிளவர்' கதை | கவின் ஜோடியாக பிரியங்கா மோகன், கொஞ்சம் ஆச்சரியம்தான்… | குட் பேட் அக்லி : 'ஓஎஸ்டி' விரைவில் ரிலீஸ் | 15 நாளில் எடுக்கப்பட்ட வெப்சீரிஸ் |
லாரன்சின் காஞ்சனா-3 படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்தவர் நிக்கி தம்போலி. தெலுங்கிலும் சில படங்களில் நடித்த இவர் பிக்பாஸ்-14 ஹிந்தி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தற்போது மீண்டு வந்துள்ளார். இதையடுத்து கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவைப்படும் பிளாஸ்மாவை தானம் செய்ய தான் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். மேலும், எனது ரத்தம் ஓ பாசிட்டிவ் வகையைச் சேர்ந்தது என்றும் தெரிவித்துள்ள நிக்கி தம்போலி, தனது ரசிகர்களை மட்டுமின்றி கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ள அனைவருமே பிளாஸ்மா தானம் செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.