ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | கணவர் சித்ரவதை செய்வதாக பாலிவுட் நடிகை வழக்கு | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் |

சுல்தான் படத்தை தொடர்ந்து அடுத்ததாக கார்த்தி நடிக்கும் படமாக உருவாகி வருகிறது சர்தார்'. இரும்புத்திரை படத்தை இயக்கிய பி.எஸ்,மித்திரன் தான் இந்தப்படத்தை இயக்குகிறார். இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டர் நேற்று வெளியானது. இந்தப்படத்தில் கதாநாயகியாக ராஷி கன்னா நடிக்கிறார்.
இந்தநிலையில் இந்தப்படத்தில் இன்னொரு கதாநாயகியாக நடிகை ரஜிஷா விஜயன் நடிக்கிறாராம். இவர் சமீபத்தில் வெளியான கர்ணன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர். கர்ணன் இவருக்கு அறிமுகப்படம் என்றாலும் சர்தார் இவருக்கு மூன்றாவது படம்.. இதற்கு முன்னதாக 'கூட்டத்தில் ஒருவன்' படத்தை இயக்கிய டிஜே ஞானவேல் இயக்கிவரும் படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார் ரஜிஷா விஜயன்.