2வது வாரத்தில் கூடுதல் தியேட்டர்களில் 'காந்தாரா சாப்டர் 1' | எனக்கான போராட்டத்தை அமைதியாக நடத்துகிறேன்: தீபிகா படுகோனே | விருஷபா ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று வரும் சூர்யா, வெங்கி அட்லூரி படப்பிடிப்பு | டில்லி முதல்வரை சந்தித்த காந்தாரா சாப்டர் 1 படக்குழு | இங்கிலாந்து பிரதமருடன் அமர்ந்து படம் பார்த்த ராணி முகர்ஜி | 'மெண்டல் மனதில்' என் மனதுக்கு மிக நெருக்கமான படம் : ஜிவி பிரகாஷ் | அடி உதை வாங்கினேன் : ஹீரோவான பூவையார் | ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! |
சிவப்பதிகாரம் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அறிமுகமானவர் மலையாள நடிகை மம்தா மோகன்தாஸ். தற்போதுவரை, தொடர்ந்து பிசியான கதாநாயகியாகவே வலம் வரும் மம்தா, தற்போது மலையாளத்தில் பிரித்விராஜுடன் இணைந்து அந்தாதுன் ரீமேக்கில் நடித்து வருகிறார். அதேபோல தமிழில் சிவப்பதிகாரம் படத்திற்கு பிறகு, 15 வருடங்கள் கழித்து, தற்போது விஷாலுடன் மீண்டும் எனிமி படத்தில் இணைந்து நடித்து வருகிறார்.
இந்தநிலையில் தெலுங்கிலும் லால்பாக் என்கிற படத்தில் நடித்து வருகிறார் மம்தா மோகன்தாஸ். இதற்கு முன்னதாக நாகார்ஜுனாவுடன் இணைந்து 11 வருடங்களுக்கு முன் தெலுங்கில் 'கேடி' என்கிற படத்தில் நடித்திருந்த மம்தா, நீண்ட இடைவெளிக்கு பின் தெலுங்கில் நுழைந்துள்ளார். இந்தப்படத்தில் நர்ஸ் கதாபாத்திரத்தில் ஒரு பெண் குழந்தைக்கு அம்மாவாக நடிக்கிறார் மம்தா மோகன்தாஸ்.