4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | கணவர் சித்ரவதை செய்வதாக பாலிவுட் நடிகை வழக்கு | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் | கதைநாயகன் ஆன பரோட்டா முருகேசன் | இந்த வார ரீ ரிலீஸில், 'அட்டகாசம், அஞ்சான்' |

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா, தற்போது அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக புஷ்பா என்ற படத்தில் நடித்து வருகிறார். அதோடு ஹிந்தியில் அமிதாப்பச்சனுடன் குட்பை, சித்தார்த் மல்ஹோத்ராவுடன் மிஷன் மஜ்னு ஆகிய படங்களிலும நடித்து வருகிறார்.
இந்நிலையில், ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் புதிய படத்தின் கதை விவாதம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. எழுத்தாளர் சாய் மாதவ் புர்ரா என்பவரும் ஷங்கருடன் இணைந்து ஸ்கிரிப்ட் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். ஜூலை அல்லது ஆகஸ்ட்டில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
மேலும், இந்த படத்தில் நாயகியாக நடிப்பதற்கு தன்னை அணுகியதாக தெரிவித்துள்ள ராஷ்மிகா மந்தனா, ஷங்கரின் அழைப்பிற்காக தான் காத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.