ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | கணவர் சித்ரவதை செய்வதாக பாலிவுட் நடிகை வழக்கு | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் |

நெஞ்சிலே துணிவிருந்தால், நோட்டா ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் மெஹ்ரீன் பிர்ஷாடா. தனுஷுடன் இணைந்து பட்டாஸ் என்கிற படத்திலும் நடித்திருந்தார். ஆனால் தமிழ் திரையுலகம் தனக்கு கைகொடுக்கவில்லை என்பதால், தற்போது தெலுங்கு திரையுலகம் பக்கம் கவனம் செலுத்தி வரும் மெஹ்ரீன், அங்கே வெங்கடேஷுக்கு ஜோடியாக எப்-3 என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
இந்தநிலையில் மெஹ்ரீனுக்கும் ஜெய்ப்பூர் மாநில காங்கிரஸ் எம்எல்ஏவின் மகன் பாவ்யா பிஷ்னோஷ் என்பவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பாவ்யாவின் காதலை தான் எப்போது எந்தவிதமாக ஏற்றுகொண்டேன் என்பது குறித்து தற்போது மெஹ்ரீன் ஒரு வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் பாவ்யா பிஷ்னோஷின் குடும்ப விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக அந்தமான் சென்றார் மெஹ்ரீன். அப்போது கடலில் ஸ்கூபா டைவிங் அடிக்க ஆசைப்பட்டு கடலில் குதித்துள்ளார் மெஹ்ரீன். அதற்கு முன்னதாகவே தனது காதலை சொல்லும் ஏற்பாட்டுடன் தயாராக வந்திருந்த பாவ்யாவும் மெஹ்ரீனை தொடர்ந்து கடலில் குதித்துள்ளார்.
அங்கு தண்ணீருக்கு அடியில் மண்டியிட்டபடி 'என்னை திருமணம் செய்து கொள்கிறாயா என்று எழுதப்பட்ட பதாகையை மெஹ்ரீனிடம் காட்ட சந்தோஷத்தில் அதிர்ந்துபோன மெஹ்ரீன் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். உடனே தண்ணீருக்குள்ளேயே மெஹ்ரீனின் விரலில் மோதிரம் அணிவித்து தனது காதலை உறுதி செய்தாராம் பாவ்யா பிஷ்னோஷ்.