ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
நடிகர் விஷ்ணு விஷால் தற்போதுதான் இரண்டாம் கட்ட ஹீரோக்களில் முக்கியமான இடத்தை பிடித்து வளர்ந்து வருகிறார். இந்தநிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் தனது முதல் மனைவி ரஜினியை விவாகரத்து செய்தவர், பின்னர் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் காதலில் விழுந்தார். சமீபத்தில் தனது காதலையும் திருமண அறிவிப்பையும் முறைப்படி வெளியிட்ட அவர், ஏப்-22 அன்று ஜூவாலாவை திருமணம் செய்து கொண்டார்.
ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்வு கொரோனா பரவல் காரணமாக குறைந்த அளவு விருந்தினர்களுடன் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நடைபெற்றது. அடுத்ததாக கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக, தங்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியை விஷ்ணு விஷால் நடத்துவாரா என்கிற கேள்வி பலரிடம் எழுந்தது. இந்தநிலையில் ஐதராபாத்தில் தனது திருமண நிகழ்வையும் நேற்று நடத்தி முடித்துவிட்டார் விஷ்ணு விஷால். இந்த புகைப்படம் ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.