கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் |
கொரோனா காலத்தில் சில சினிமா நடிகைகள் அவர்களது கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது சரியா என்பது குறித்து நேற்றுத்தான் ஒரு செய்தி வெளியிட்டோம். அது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் கருத்து தெரிவித்த ஸ்ருதிஹாசன், நம்முடைய கொண்டாட்டங்கள் மற்றவர்களது உணர்வுகளை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்,” என்றும் கூறியதாக ஒரு மேற்கோளும் இருந்தது.
இந்நிலையில் இன்று ஸ்ருதிஹாசன் சில எரோட்டிக் ஆன புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிட்டு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார். மற்றவர்களாவது கிளாமரான புகைப்படங்களைப் பதிவிட்டு நிறுத்திக் கொண்டார்கள்.
ஆனால், ஸ்ருதிஹாசன் ஒரு படி மேலே போய் ஏடாகூடமான எக்ஸ்பிரஷன்களுடன் கூடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். நாடு முழுவதும் என்ன மாதிரியான ஒரு இக்கட்டான சூழல் நிலவுகிறது, இப்போது எப்படியான புகைப்படங்களை வெளியிட வேண்டும் என்ற சிறிய பொறுப்புணர்வு கூட இல்லாமல் இப்படி புகைப்படங்களை வெளியிடுவதை நடிகைகள் தவிர்க்க மாட்டார்களோ என்ற சாமானிய ரசிகனின் குரல் அவர்கள் காதுகளில் விழுமா ?.